பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

மனிதன் அறுசுவை உணவை உண்கிறான். அவனிடம் பத்து வகைக் குணங்கள் பதிந்திருக்கின்றன. என்றாலும் ஒரு மனிதனின் வரலாற்றைக் காப்பியமாகவோ நாடக மாகவோ நவீனமாகவோ வடித்துத் தரும் எழுத்து வேந்தர்கள், அந்த மனிதனிடம் காணப்பட்ட அருங் குணத்தை மட்டுமே எடுத்துச் சொல்லும் ஒலி பெருக்கிக் கருவிகளாக வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர். தங்களது கதா நாயகன், அபூர்வ குணங்களின் சங்கமம் என்றே பறை சாற்றுகிறார்கள். அவனிடம் சில நேரங்: களில் உறைந்திருக்கும் இருட்டு மனத்தை - திருட்டுக் குணத்தைத் தெரிவிக்காமலேயே இருந்து விடுகிறார்கள்.

இரவும் பகலும் இனிய உலகில் உண்டு. வாடையும் வெம்மையும் மாறி மாறி வருவதுண்டு. இதிலே இரவுக்கு மட்டும் வாழ்த்துப் பாடுவது நியாயமில்லை; வாடையை மட்டும் வரவேற்பது பொருத்தமல்ல. அதைப்போலவே ஒரு மனிதனின் திருக்கல்யாண குணங்கள் அனைத்தை பும் தெரிவிப்பது தான் அவனைப் பற்றிய சரியான படப் பிடிப்பாகும்.

_பல காலமாக வானத் தோட்டத்தில் சந்திரன் உலர ஒருவதைப்"ப்ார்த்து வருகிறோம். நமது சிற்பன்ை ஒற்றுப் பொங்கி வருவதற்குச் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பயன்படுகின்றன. சந்திரனைப் பார்த்ததும் சந்தனச் செய்யுள்களையும் சுந்தரக் கவிதைகளையும் நமது