பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

செந்தமிழ்ப் புலவர்கள் தொடுத்து விடுகிறார்கள். ஆனால் எவரும் சந்திரனின் மறுபக்கம் எப்படியிருக்கும். என்றோ, அதன் உள்ளமைப்பு எப்படி இருக்கக் கூடும். என்றோ எண்ணிப் பார்ப்பதில்லை!

'சந்திரனைச் சிவபெருமான் தமது சென்னியில் சூடிக் கொண்டிருக்திறார்.’’

'சந்திரனை ராகு,கேது என்னும் பாம்புகள் விழுங்கு கின்றன.'

இப்படி அறிவுக்கு உதவாத கற்பனைகளை அவிழ்த்து விட்டு அகம் மகிழ்ந்தனர் நமது முன்னோர்.

ஆனால் அமெரிக்கர்கள் சந்திர மண்டலத்தில் குடிபுக வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இருந்து வருகிறார்கள். முதலில் நிலாவுக்கு உலாச் சென்று அதன் மண்ணைத் தமது திருப்பாதங்களால் மிதித்தவர்கள் தாங்கள்தான் என்ற வரலாற்றை அமெரிக்கர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆய்வு மனப்பான்மை - ஒய்வில்லா உழைப்பு இந்த வெற்றிக்கு உறுதுணையானது.

நமது நாட்டவர்கள், தாம் விரும்பிக் கொண்டாடும் பெருமக்களிடம் சில நேரங்களில் காணப்படும் சின்னத். தனங்களைக் கூட அறிந்து கொள்ள அச்சப்படுகிறார் கள்; உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள்; ஒப்புக் கொள்ளத் தயங்குகிறார்கள். பிறர் எடுத்துச் சொல்லும். போது, சொல்வோரைப் பார்த்து முகஞ் சுளிக்கிறார் களே தவிர, சொல்லப்படுவோரைச் சிறிதாவது சிந்திப் போமே என எண்ணுவதில்லை. -

குணமும் தோஷமும் கொண்ட பெருமக்கள் நமது நாட்டில் தொடர்ந்து தோன்றித்தான் வந்திருக்கிறார்