பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வந்திருக்கிறார். ராஜ குடும்பத்தைச் சார்ந்த இந்த அம்மையின் வயது 34. இ இதழ் : திராவிட நாடு. 23-11-1947. உமர் கையாம் சுத்தமான மதுவின்றி நான் வாழ முடியாது; மதுவருந்தாது என் உடல் கனத்தைத் தாங்க முடியாது. என்று பாடிய உமர் கையாம் பகிரங்கமாகவே மதுக் கடையில் அமர்ந்து குடித்ததாகச் சொல்லப்படுகிறது. 'அவர் மது குடிக்கவே செய்தார், அதுவும் பகிரங்க மாகக் குடித்தார்' என்கிறார் அல்லாமா ஷிப்லி. "ஆனால் ஒரு காலிப் பயலைப் போல் அவர் மதுவருந்து வதில்லை, தத்துவ வாதியாகவே குடித்தார்' என்று விப்லி மேலும் சொல்கிறார். மதுவை எப்படி அருந்த வேண்டும், யாருடன் சேர்ந்து அருந்த வேண்டும் என்றெல்லாம் உமர் ருபைகளில் விளக்கியுள்ளார். மிதமாகக் குடிக்க வேண்டும் என்றும் உபதேசிக்கிறார். மது குடிப்பது கெடுதலா? அப்படி யானால் அதைவிடக் கெட்ட காரியங்கள் செய்பவர் களும் இருக்கிறார்களே என்று தேறுதல் கூறுகிறார். சாராயம் கசப்பானதாய் இருக்குமாம். அது சாதாரண மான கசப்பா? உண்மையைப் போன்றதல்லவா என் கிறார் உமர் கையாம். 0 நூல் : பாரnகப் பெருங் கவிஞர்கள்(1955) பக்கம்-162, 103. நூலாசிரியர் ஆர்.பி.எம். கனி, பி.ஏ., பி. எல், கஞ்சா சாமியார் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களையும் இவ்வண்ணமே இவர் (திரிசிரபுரம்