பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 4 மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவர் இளமை தொடங்கித் தக்கவர்களிடம் பாடங்கேட்டும் ஆராய்ந்தும் வாசித்து முடித்தார். பின்பு தண்டியலங் காரம் படிக்க வேண்டுமென்று விரும்பினார். அதைப் பாடஞ்சொல்லுபவர்கள் கிடைக்கவில்லை. யாரிடமிருந் தேனும் அந்நூல் கிடைத்தால் பிரதி செய்து கொண்டு படிக்கலாமென்று எண்ணிப் பலவாறு முயன்றார். அவ் வூரில் ஒவ்வொரு நாளும் வீடுதோறும் சென்று அன்னப் பிச்சையெடுத்து உண்டு காலங் கழித்து வந்த பரதேசி ஒருவர் தமிழ் நூல்களிற் பழக்கமும் அவற்றுள் தண்டி யலங்காரத்தில் அதிக பயிற்சியும் உடையவராயிருந்தார். ஆனாலும் அவர் பிறரை மதிப்பதில்லை. முறையாக ஒருவருக்கும் பாடம் சொன்னதுமில்லை. அவர் தாம் இருக்கும் மடத்திற் சில ஏட்டுப் புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார். அவர் தாமாக விரும்புவாராயின் ஏதேனும் சில தமிழ் நூல்களிலுள்ள கருத்துக்களை வந்தோருக்குச் சொல்லுவார். "தானே தரக்கொளி னல்லது தன்பால், மேவிக் கொளக்கொடாவிடத்தது மடற்பனை' என்னும் உவமைக்கு அவரை இலக்கிய மாகச் சொல்லலாமென்பர். அவர் நன்றாகப் படித்தவரென்பதையும் அவரிடம் தண்டியலங்காரப் பிரதியிருப்பதையும் கேள்வியுற்ற இவர் எவ்வாறேனும் அவரிடம் தண்டியலங்காரத்தைப் பெற்றுப் பாடங்கேட்க வேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டு அவர் பிச்சையெடுக்கவரும் காலமறிந்து தெருத்தோறும் கூடவே தொடர்ந்து பேசிக் கொண்டு சென்றும், அவருக்கு பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து உரிய காலத்திற் சேர்ப்பித்தும் அவர் உவகையோடு இருந்த சமயத்தில் தம் கருத்தை மெல்லப் புலப்படுத்தி அவரிடமிருந்த புத்தகத்தைப் பெற்று எழுதிக் கொண்டு பாடமும் கேட்டார்.