பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.

இது தொகுப்பு நூல்தான் என்றாலும் பலரது வாழ்க்கை ஏட்டை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் முறையில் இது ஒரு முதல் நூல் என்றே கூறலாம். இதனைத் தொடர்ந்து பலரும் இது போன்ற நூலை உருவாக்குவதற்கு உந்துதலை ஏற்படுத்தும் வகையில், இது வழி நூலாகவும் அமையும். பல நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டும் வகையில் இது மேற்கோள் நூலாகவும் திகழ் கிறது என்றும் சொல்லலாம்.

இந்த அற்புதத் தொகுப்பை உருவாக்கியுள்ள உவமைக் கவிஞர் சுரதா அவர்சுளுக்குத் தமிழ் உலகம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிலது. ஒவ்வொரு பகுதிக்கும் அவர் சூட்டியுள்ள தலைப்பே இனிக்கிறது; நம்மை ஈர்க்கிறது!

சன்னமாக நூலினால் கோக்கப்படுகிறது வண்ண மணிமாலை. முத்துக்கள் நம் கண் முன்னே தெரி கின்றன. உள்ளே உள்ள நூல் வெளியே தெரிவதில்லை. அதைப் போல நூலில் உள்ள அரிய செய்தி மணிகளை எல்லாம் தொகுத்துள்ள சுரதா அவர்களின் உழைப்பை நாம் உணர்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள முடி கிறது. w

சொல்லுக்கு உயிர் உண்டு - சொல்லிலே சுவை. யுண்டு. இவற்றை மெய்ப்பித்து வருகிறார் உவமைக் கவிஞர். தமிழ் வாசகர் உலகத்திற்கு இந்த அரிய தொகுப்பு நூலை உருவாக்கி வழங்கியுள்ள உவமைக் கவிஞரின் முயற்சியைத் தமிழுலகம் வாழ்த்தும்போற்றும் வரவேற்கும் என்பது திண்ணம்.

குறிப்பு : இரவு 12 மணிக்கு எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் எழுதப் பெற்றது.

சென்னை - 82 ஏழாயிரம் பண்ணை

சண்முக சுந்தரக் கவிராயர்.