பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 I துரியகவி திருமலைக் கொழுந்து கவிராயர் துரியகவி திருமலைக் கொழுந்து கவிராய ரென்பார் இற்றைக்குச் சுமார் 80 ஆண்டுகட்கு முன்னர் சிக்கிலி ஐயர் குளம் என்னும் ஊரிலே கம்மாளர் மரபிற் பிறந்த வர். இவர் மதுக்குடியில் நோக்கமுள்ளவர்போல் சி அடிகள் இயற்றியுள்ளார். *

  • தா சி சா வொன்றைத் தராவிடிலோ இன்றைக்கு

நீ சீ சா வென்றே நிகழ்த்துவேன்' - என்றது காண்க. 0 நூல்: இலக்கிய வரலாறு (1953) பக்கம்-468 நூலாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.க பாபர் பிரா, குஷாப், சீனாம் நதிகளுக்கு இடையில் உள்ள நாடுகள் பேபருக்குரிமையாயின. தமக்குப் பதிலாக அந் நாடுகளை ஆளச் சிலரை நியமித்துத் தாம் காபூலுக்குச் சென்றார். - இது வரையில் அவரைப் பற்றாத குடியென்னுங் கொடிய பழக்கம் அவரிடம் குடி கொண்டது. எங்கு சென்றாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும், குடிப்பதென்றா லவருக்குக் கொண்டாட்டம். இயற்கையழகு வாய்ந்த தோரிடத்தை அவர் காண்பார். உடனே தம் நேயரு டன் குடிக்க உட்கார்ந்து விடுவார். நீர் நிலவளங்களாற் செழித்து வளர்ந்த பயிர்களைக் கண்டவுடனே உடல் பூரித்துக் குடிக்கக் கருதுவார். சுருங்கக் கூறின் அவர் க்ாலைத் தெய்வ வழிபாடு குடியே: மாலையிலும் அப்படியே. குடியில்லாச் சமயமே இல்லை; என்றாலும்,