பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琴多 இக்கொடிய பழக்கம் அவர் முயற்சிகளுக்கும் செயல்களுக் கும் இடையூறாக இல்லை. யாவரும் மதிமயங்கி அறி விழக்கும் குடிப்பேய் அவரை மட்டில் கெடுக்கவில்லை. யாம். பேபரைப்போல் குடித்தவர் எவருமிலர்; எனினும், அவரைப் போல் காரியத்தில் கண்ணுங் கருத்துமாக இருந்தவருமில்லை. குடித்தவருள் தந்நிலை மாறாதிருந் தவர் இவர் ஒருவரே. ஏனையோர் குடிமயக்கத்தால் தம்மை மறந்து பிதற்றுவதைக் கண்டு அவர் மனம் நோவ துண்டு: ஒரு சமயம் அருக்குச் சுரநோய் கண்டது; அப் பொழுது குடியை விட்டுவிட நேர்ந்ததாம். குடிப்பவர் களுக்குக் கடவுள் அருளாரென்பது இவரது உறுதியான நம்பிக்கை; ஆதலால் இவர் குடித்து வந்த விலையுயர்ந்த பாத்திரங்களைக் கீழே போட்டு உடைத்து விட்டு "இனிக் குடிப்பதில்லை என்று சபதம் செய்தாராம். e நூல்: பேபர் வாழ்க்கை வரலாறு (1946) பக்கம் 79. நூலாசிரியர்: வே. துரைசாமி தமிழாசிரியர், பி. எஸ். ஹை ஸ்கூல். மயிலாப்பூர். பாரதியார் பாரதியாரைப் போற்றுபவர் பலர். வெறுக்கும். பிரகிருதிகளும் உண்டு. அவரைப் பற்றிக் குறை சொல். அம் அதிருப்தி அண்ணாத்தை"களுமிருக்கிறார்கள். ஒரு. மனிதன் என்றிருந்தால் அவனிடம் குறையிருந்தே தீரும். பாரதியைப் பற்றிக் கூறப்படும் குறைகளிலே ஒன்று அவர் லாகிரி லோலர் என்பது. லாகிரிலோலராயினும் எக் காலத்திலும் அவர் தம் நினைவிழந்தது. கிடையாது: இருக்குமிடம் தெரியாது பிதற்றியது கிடையாது; தம் கொள்கையினின்றும் வழுவியது கிடையாது.