பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 0 நூல்: பாரதியார் (1950) பக்கம் - 58 நூலாசிரியர்: சக்திதாஸன் சுப்பிரமணியன் பீட்டர் 1696-ல் ஐவன் இறந்த பிறகு, பீட்டர் மட்டும் ஆட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சிக் காலம், தற்கால ருஷ்யாவின் வரலாற்றின் தொடக்கத்தைக் குறித்துக் காட்டுகிறது என்று கூறப்படுகிறது. வரலாற்று ஏடுகளில் காணக்கிடக்கும் விசித்திர மனிதர்களுள் பீட்டரும் ஒருவராவார். உடல் வலிமை பெற்றவர். அவர் மகா முரடர், எதற்கும் கட்டுப்படா தவர். கொடுஞ் செயல்களைச் செய்வதற்கு அஞ்ச மாட்டார். அவருடைய சகோதரி சோபியாவை அடைத்து வைத்தார். அவருடைய மனைவியைக் கன்னிமாடத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய மகனை, தன்னை எதிர்த்த காரணத்திற்காகச் சித்திரவதை செய்து கடைசியில் கொன்றார். அவர் ஒரு குடிகாரர். ஆகவே, அவர் இறந்தபொழுது மக்கள் எல்லோரும் பேராறுதல் அடைந்தார்கள். - 0 நூல்: உலக வரலாறு (1968) (கி.பி. 1789 முதல் இன்றுவரை) நூலாசிரியர்: டி. ஆர். இராமச்சந்திரன், எம். ஏ: எம்.லிட் ; (பேரா சிரியர், வரலாற்றுத்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை) பீரார் ராகோஜி பான்ஸ்லே மஹாராஷ்டிரர்களுக்கும் நிஜாம் அரசனுக்கும் விரோதம் உண்டாயிற்று. அதன் காரணமாய் தோஸ்த்