பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அலியின் ஜில்லாக்களும் எதிர்க்கப்பட்டன. யுத்தத்தில் தோஸ்த் அலி மாண்டான். அவனுடைய குமாரனான ஸப்தர் அலியும், சந்தா சாஹெபும் தங்களுடைய மனைவி மக்களுடன் புதுச்சேரியில் அடைக்கலமடைந்தனர். அதனால் மஹாராஷ்டிரர்கள் புதுச்சேரி கவர்னரிடம் ஒரு தூதனையனுப்பினார்கள். அப்பொழுது பிரஞ்சு கவர்னர் தம்முடைய இனத்தாருக்குக் குறைவு வராமலி ருக்குமாறு தம்மை யடைக்கலம் பெற்றவர்களை முடிவு வரை காப்பாற்றுவதற்குத் தயாராயிருப்பதாய் விடை யளித்து பிரஞ்சு சாராயமும் மரியாதையா யனுப்பப் பட்டது. மஹாராஷ்டிரத் தலைவனாய் படையெடுத்து வந்திருந்த பீரார் ராகோஜி பான் ஸ்லேயும் அவனது மனைவியும் அந்தச் சாராயத்தை ருசி ப்ார்த்ததும் மயங்கி விட்டனர். ஊருக்குத் திரும்பலாயினர். இதனால் தென்னாட்டில் பிரஞ்சுக் காரர்களுக்கு அதிக கெளரவம் ஏற்பட்டது. - 0 நூல்: நமது பரத கண்டம் (1926) (இரண் டாம் பாகம்) பக்கம் - 196-197, நூலாசி ரியர்: வை. சூரியநாராயணன் சாஸ்திரி, எம்.ஏ., எல். டி. பேகம் பாரா பேகம் பாரா என்னும் வடநாட்டு நடிகை ஒரு. சமயம் குடித்துவிட்டுக் கண்மண் தெரியாமல் காரை ஒட்டிச் சென்று விபத்தை உண்டாக்கி விட்டார். உடனே அவர் மீது வழக்கு நடந்தது. இருபத்தைந்து ரூபாய் அபராதமும் ஐந்து வார சிறை தண்டனையும் விதித்தார் கள். அன்று ரத்ததானம் செய்யும் கைதிகளுக்குத் தண்ட னையைக் குறைக்க சட்டம் இடமளித்தது. அதன்படி