பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 இந் நடிகை பத்து நாட்கள் தண்டனையை அனுபவித்த பிறகு ரத்த தானம் கொடுத்து விடுதலை பெற்று வீடு திரும்பினாராம். 0 இதழ்: குண்டூசி (ஜூன், 1961) பக்கம் - 48 மகாராஷ்டிர துணை முதல்வர் ராம்ராவ் அடிக் பம்பாய், ஏப். 18-மகாராஷ்டிர துணை முதல்வர் சாம்ராவ் அடிக், தமது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். இதனை அவர் இன்று நிருபர்களிடம் அறிவித்தார். - ராம்ராவ் அடிக் இம் மாதம் 7-ந் தேதி (7-1-84) மேற்கு ஜெர்மனிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது குடிபோதையில் இருந்ததாகவும்,விமானப் பணிப் பெண்ணிடம் முறை கேடாக நடந்து கொண்ட தாகவும், மேற்கு ஜெர்மனி போய்ச் சேர்ந்த போதும் இதே போன்ற செயல்களைச் செய்ததாகவும் அவர் மீது புகார்கள் கிளம்பியது நினைவிருக்கலாம். மகாராஷ்டிர சட்ட சபையிலும் பார்லிமெண்டிலும் இந்த விஷயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. - இந்தப் புகார்களைத் தான் அடிக் மறுத்துள்ளார். தம் மீதான புகார்களை மறுத்த போதிலும் மேற்கு ஜெர்மனிக்கு விமானத்தில் பயணம் செய்த போது இரண்டு மூன்று தடவை மது பானம் குடித்ததாக அவர் ஒப்புக் கொண்டார். "என் வாழ்க்கையில் இனி ஒரு நாளும் மதுவைத் தொட மாட்டேன்' என்று சபதம் செய்தார். - .