பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

ஜேம்ஸ் ஆலன்


சொற்களும், செயல்களும் அவர்களுக்கே சொந்தமான தனிப்பட்ட செல்வாக்கையே வெளிப்படுத்துகின்றன. பிற மனிதரனைவரும் உள்ளூரச் செவிமடுத்து இயல்புணர்வாகவே கண்டுகொள்கின்ற செவிப் புலனாகாத ஓர் ஒலி அவர்களிடமிருக்கின்றது. மெய்யான ஒலியினின்றும் பொய்யான ஒலியை அவர் பிரித்தறிந்து விடுவர்; எனினும், தாம் அறிந்து கொண்டது எவ்வாறென அவர் அறியமாட்டார். ஒலிகளிலுள்ள மிகமிக நுண்ணிய வேறுபாடுகளைப் புறச்செவி உணர்ந்தறிதல் போன்று, உயிர்களிடையுள்ள நொய்தான வேறுபாடுகளை அகச்செவி உணர்ந்தறியவியலும். ஏமாற்றுபவனைத் தவிர இறுதியில் ஏமாற்றப்படுபவர்கள் யாருமே இலர்.

இயல்பார்வமற்றவர்கள் தமது வெற்றிகரமான பாசாங்குகளைக் குறித்துத் தம்மைத் தாம் தற்புகழ்ச்சி செய்து கொள்வதால் அவர்கள் ஏமாற்றிக் கொள்வது தம்மையே அன்றிப் பிறரையன்று. இது அவர்களுடைய கண்மூடித்தனமான மடமையாகும். அவர்களுடைய செயல்கள் ஒளிப்பு, மறைப்பின்றி அப்படியே எல்லா நெஞ்சங்களின் முன்பும் வைக்கப்படுகின்றன. மனிதனின் நெஞ்சத்துள் ஒரு தீர்ப்புரிமை மன்றமிருக்கின்றது; அதனுடைய தீர்ப்புக்கள் தவறுடையனவாய் ஆவதில்லை. புலன்கள் தவறின்றிக் கண்டுகொள்ளக் கூடுமெனின், ஆன்மா தவறின்றிப் புரிந்து கொள்ளாதோ? இந்த அகத் தவறின்மை மனித இனக் கூட்டுத் தீர்ப்புரையிலே காணக்கிடக்கின்றது. இத் தீர்ப்புரை நிறைவானது. இலக்கியம், கலை, அறிவியல், புனைவு, சமயம் ஆகிய அறிவின் ஒவ்வொரு துறையிலும், தீமையினின்றும்