பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 148


‘உள்ளொளி’, அச்சத்தால் நடுங்குபவர்களுக்கு எங்கிருக்க முடியும்? நாம் எவ்வாறிருக்கின்றோமோ அதன் அடிப்படையிலேயே நாம் நிலைகொள்ள வேண்டுமே அன்றிப் பிறனொருவன் எவ்வாறிருக்கின்றான் என்பதன் அடிப்படையில் நிலைகொள்ளுதல் கூடாது. பால் குடிப்பதும், பற்றிக் கொள்வதும் பசுங்குழவிக்குத் தேவையே. ஆனால் ஒரு மனிதன் அவ்வாறின்றித் தன் சொந்தக் கால்களைக் கொண்டே நடந்து செல்ல தொடங்கி விடுகின்றான். மனிதர் தாமாகவே அடைவதற்கென அமைக்கப்பட்டிருக்கின்ற ஒன்றைத் தம் கைகளில் தருமாறு இறைவனை வழிபடுகின்றனர். தாம் கடுமையாக உழைத்துப் பெறவேண்டிய உணவைத் தமது வாயில் ஊட்டுமாறு வழபடுகின்றனர். ஆனால், மனிதர் இந்த ஆன்மீகக் குழவிப் பருவத்தை விரைவில் கடந்து விடுவர். தமக்காக வழிபாடு செய்யவும், தமக்கு அறிவுரை கூறவும் புரோகிதருக்கு மக்கள் கூலிகொடுக்காத நிலை வந்தே தீரும்.

தன்னைத்தான் நம்பாத நிலையே மனிதனின் தலையாய தொந்தரையாகும். எனவே, தன்னம்பிக்கையுடைய மனிதன் அரிதான, தனிப்பட்ட காட்சிப் பொருளாகி விடுகின்றான். ஒரு மனிதன் தன்னை ஒரு “புழு”வாகத் தானே கருதுவானாயின், பயனற்ற நெறியைத்தவிர அனிடமிருந்து வேறு என்ன விளைவு ஏற்பட்டு விட முடியும்? “தன்னைத் தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளுபவன் மேன்மைப் படுத்தப் படுவான்” என்பது