பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

ஜேம்ஸ் ஆலன்


உண்மையே. ஆனால், தன்னைத்தானே தரங்குறைத்துக் கொள்ளுபவனுக்கு அந்நிலை ஏற்படாது. மனிதன் தான் இருக்கின்றவாறே தன்னைக் காணவேண்டும். தகுதியற்றது ஏதேனும் தன்னிடமிருப்பின் அதை நீக்கித் தகுதியுடையதை விடாமல் பற்றிக் கொண்டு நம்பிக்கையும் கொள்ள வேண்டும். மனிதன் தன்னைத்தான் தரங்குறைத்துக் கொள்ளும் போது அவன் தரங்குன்றியே விடுகின்றான். அவன் தன்னுயர்வுக்கான வாழ்வு நடத்தும்போதே உயர்வு படுத்தப்படுகின்றான்.

ஓரளவேனும் தன்னம்பிக்கை கொண்டு மனிதனுடைய செல்வாக்கையும், வளப்பத்தையும் குறிப்பிடத்தக்க அளவு பெருக்க முடியாத துறை வாழ்வில் எதுவுமே இல்லை. உலகியல் சார்ந்ததோ சமயஞ் சார்ந்ததோ ஆசிரியர், அமைப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஆட்சியும் அதிகாரமும் செலுத்த வேண்டிய பதவியிலுள்ளோர் அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத கருவியாகும்.

ஓரளவேனும் தன்னம்பிக்கை கொண்டு மனிதனுடைய செல்வாக்கையும், வளப்பத்தையும் குறிப்பிடத் தக்க அளவு பெருக்க முடியாத துறை வாழ்வில் எதுவுமே இல்லை. உலகியல் சார்ந்ததோ சமயஞ் சார்ந்ததோ ஆசிரியர், அமைப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஆட்சியும் அதிகாரமும் செலுத்த வேண்டிய பதவியிலுள்ளோர் அனைவருக்கும் இது ஓர் இன்றியமையாத கருவியாகும்.