பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 56



மட்டு சிக்கனத்தின் வலுமிக்க உட்கருவாகும். அது செயல்கள் அனைத்திலும் மையப் பாதையைக் கண்டு கொள்வதன் மூலம் புறக் கோடிகளைத் தவிர்த்து விடுகின்றது. தேவையற்றதிலும், கேடு பயப்பதிலுமிருந்து விலகி நிற்பதிலும் அதனியல்பு அமைந்து கிடக்கின்றது. தீயனவாய் இருப்பவற்றில் அளவு என்ற ஒரு காரியம் இருக்கவே முடியாது. ஏனெனில், அது மட்டு மீறியதாகவே இருக்கும். உண்மையான மிதம் தீயவையினின்றும் விலகி நிற்கின்றது. நம் கைகளை நெருப்பினுள் காட்டுவது நெருப்பை நாம் மட்டாகப் பயன்படுத்துவதாகாது. பாதுகாப்பான தொலைவிற்கு அப்பாலிருந்து கொண்டு சூடேற்றிக் கொள்வதே அதை மட்டாகப் பயன்படுத்துவதாகும். மனிதன் அதைத் தொடுவதாயிருப்பினும் தீமை அவனை எரித்துவிடக் கூடிய ஒரு தீயே ஆகும்.

புகை பிடித்தல், பொடிபோடுதல், மதுவருந்தல், சூதாடல் போன்ற தீயநெறிகள் ஆயிரக் கணக்கானவர்களை நலக்குறைவு, துன்பம், தோல்வி இவற்றிற்கு இழுத்துக் தள்ளியிருப்பினும், நலம், இன்பம், வெற்றி இவற்றை அடைய எவருக்கும் என்றும் உதவி செய்ததில்லை. திறமைகளும் வாய்ப்புகளும் சமமாயிருக்கின்ற இருவரிடையே, அவற்றைத் தவிர்த்து நடக்கும் மனிதன் அவற்றை நாடியோடும் மனிதனை விட எப்போதும் முன்னேறியே இருப்பான். நலமுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ்ந்த மக்கள் தம் பழக்கங்களில் எப்போதும் மட்டாகவும், செட்டாகவுமே இருந்து வந்துள்ளனர். வாழ்வு ஆற்றல்கள் மட்டால் பாதுகாக்கப்படுகின்றன; மிதமிஞ்சுதலால் அவை