பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

ஜேம்ஸ் ஆலன்


துறை, கருத்துக்குக் கருத்து, சட்டத்திற்குச் சட்டம், குடியினத்திற்குக் குடியினம் ஓர் ஒழுங்கான வரிசையிலும், தரவாரியாகவும் ஒன்று சேர்க்கப் படுவதாலேயே தொழில் நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவில் பெருகி வளர்ந்து முழுநிறைவு நிலை எய்துகின்றன. தனது வழிமுறைகளைத் தொடர்ச்சியாகச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்கின்ற மனிதன் ஆற்றலைப் பெருக்குவதில் பயனடைபவனாகின்றான்; எனவே, வணிகன் தன் வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் வளப்பமுடைய வனாகவும், புதியது புனைபவனாகவும் இருக்க இந்நிலை அவனைத் தகுதியுடையவனாக்குகின்றது.

ஏனெனில், கோயில்களையோ குணவியல்புகளையோ, வாணிபங்களையோ சமயங்களையோ கட்டமைப்போர் புவியில் தீரர்களாயிருக்கின்றனர். அவர்களே மனித இனத்தின் காவலர்களாயும், முன்னோடிகளாகவும் இருக்கின்றனர். முறைப்பாட்டுடன் கட்டமைப்பவன் ஒரு படைப்பாளியும், பாதுகாவலனும் ஆவான். அதே போது, ஒழுங்கற்ற மனிதன் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்திவிடுகின்றான். ஒருவன் கட்டுப்பாடு எனும் ஒழுங்குமுறையைக் கைக்கொண்டு, பாதுகாத்து, ஒவ்வொரு நுணுக்கத்தையும் அதற்குரிய இடத்தில் வைத்து, ஒவ்வொரு துறையையும் அதன் குறிப்பிட்ட கடமையில் ஈடுபடுத்தித் தனது குறிப்பிட்ட பணியை ஒட்டிய மிக எளிய விளக்கத்தையும் எக்கணத்திலும் ஆய்வுக்காகவோ தேவையைப் பொறுத்தோ கொண்டுவருதல் இயலுவதாக இருக்கும் நிலையில் அத்துணைத் திறப்பாட்டுடனும் நிவுைடனும் வரிசையும்,