பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளில் நிகழ்ந்த சந்திப்பு

179

ஏற்று அணிந்து கொண்டீர்!” என்று சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றுகொண்டாள், வெறுப்புடன். அவளுடைய ஊடலைக் கண்டு உதயணன் திகைத்தான்.

அவள் வெறுப்பையும் ஒதுங்குதலையும் கண்ட உதயணன் “பதுமாபதி என்ற பெயரையே இன்று இப்போது நீ சொல்லத்தான் நான் கேட்கிறேன். இதற்கு முன்பு அறியேன். அவ்வாறிருக்க நீ என்னைக் கூறுவது வீண் பழியாம். என் மனம் துயர் கொள்ளுமாறு தவிப்புறச் செய்வது உனக்கு அழகன்று. என் மனத்திற்கு உவகை அளிப்பது உன் கடமை” என்றிவ்வாறு மேலும் வேண்டிக் கொண்டான். இப்போது உதயணன் கண் முன்பு தத்தை தோன்றவில்லை. அதற்குப் பதிலாகப் பொழுது விடிந்து ஒளிபரவித் தோன்றியது. தான் அதுவரை தத்தையைக் கண்டதும், பேசியது, அவள் சினங் கொண்டது எல்லாம் இரவு நேரத்துக் கனவு என்பதை உதயணன் உணர்ந்தான். கனவை நண்பர்களுக்கு விளங்க எடுத்துரைத்தான். உதயணன் முதல் நாளிரவு கண்ட கனவை அவன் கூறக்கேட்ட நண்பர் மகிழ்ந்து, “கனவிற் கண்டதும் நல் நிமித்தத்திற்கு உரியதே. தத்தை உயிருடன் மீண்டும் உனக்குப் கிடைப்பாள் என்பதையே கனவு நிகழ்ச்சியும் வற்புறுத்துகிறது” என்று கூறி உதயணனை வாழ்த்தினர்.

35. இருளில் நிகழ்ந்த சந்திப்பு

ண்பர்கள் தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை உதயணனுக்குக் கூறினர். “உன் கனவில் பதுமாபதியைக் குறிப்பிட்டுத் தத்தை சினங்கொண்டு ஊடியதாக நீயே கூறுகின்றாய்! எனவே பதுமை கொடுத்த மாலையையும் மற்றவற்றையும் அணிந்து கொள்வது சரியல்ல! உனக்குத் தத்தையின்மேல் மெய்யன்பு இருக்குமாயின் பதுமையின் மேல் ஏற்பட்டிருக்கும் இவ் விருப்பத்தை நீ கைவிடத்தான் வேண்டும்” என்று உதயணனுக்கு உயிர் போன்ற நெருங்கிய