பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவேறிய நோக்கம்

327

வயந்தகன் இவ்வாறு கூறியதும் உதயணன், “வயந்தக! இதற்கு நான் விடை கூறித்தான் நீ உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் உயிரினும் இனிய காதலி வாசவதத்தையே அல்லவா? என் தீவினைப் பயனால் அவள் மறைந்துவிட்டாள். இலாவாண நகரத்திலே நெருப்பு அவளைக் கொன்றுவிட்டதே?” என்று மறுமொழி கூறினான்.

“அரசே! தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால், அவர் மறைவை எண்ணி, ஒரு நாட்டிற்கு மன்னராகிய தாங்கள் இவ்வாறு வெளிப்படையாக அழுது அரற்றிக் கொண்டிருப்பது பிறருக்குத் தங்கள் பலவீனத்தைக் காட்டி விடும்! தங்கள் மனம் அடிக்கடி குழம்பும் இயல்புடையதாக இருக்கிறதே? வாசவதத்தையே உயிர்க் காதலி என்றால், பதுமையை எப்படிக் காதலித்தீர்கள்? ஏன் மணந்து கொண்டீர்கள்? இப்போது அவள்மேல் வெறுப்புக் கொள்வது எதற்காக?” என்று பேச்சுப் போக்கில் அதிக உரிமை பாராட்டி இந்தக் கேள்வியை வெளியிட்டான் வயந்தகன்.

வயந்தகனுடைய இந்தச் சொற்கள் உதயணனைத் திகைக்க வைத்துவிட்டன; சுருக்கென்று மனத்தில் தைத்தும் விட்டன. ஆனால் பொறுத்துக் கொண்டு, “பதுமை, வாசவதத்தையைப் போலவே உருவ அமைப்புப் பெற்றிருந்ததனால் என் மனம் அவளிடம் பேதலித்துவிட்டது. அன்றியும் பதுமையைக் காதலித்தது, மணம் புரிந்து கொண்டது யாவும் என் விதியினது விளைவுகள். அவற்றைத் தடுத்திருக்க நாம் யார்?” என்று பதில் கூறினான். “அன்று நாம் இராசகிரிய நகரத்திலே சந்தித்த அந்தண முனிவர், இன்று தற்செயலாக இங்கே வந்திருக்கிறார். அன்று வாசவதத்தையை எப்படியும் உயிரோடு காண முடியும் என்று வாக்களித்த அம் முனிவர் இன்றும் அதையே வற்புறுத்திக் கூறுகின்றார். ஆனால், இதற்காக அவர் உங்களுக்கு விதிக்கும் நிபந்தனை ஒன்றுண்டு. நீங்கள் உங்களது பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்து, வாசவதத்தையைப் பற்றிய நீங்கா நினைவோடு, பதுமையைப் பிரிந்து சில நாள்கள்