பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த, கோவேந்தன். 118

வியப்புக்குரிய எமது செயல்கள் எல்லாம் நொறுக்கப் பட்டுள்ளன.

நாம் உண்டோம், உறங்கினோம், இப்போது உளச்சல் பட்டுள்ளோம்.

நாம் ஈகங்கள் செய்தோம்; இருந்தும் கைவிடப்பட்டுள் ளோம்.

நாமாகவே அழகான மாளிகைகளைக் கட்டினோம், அவற்றில் தங்குவதில்லை.

நமது துயரங்கள் ஆழம் மிக்க கடல்களைப் போன் றவை;

நமது துன்பங்கள் பெரும் மலைகள் போன்றன.

நமது மன வருத்தங்களோ மிகுதியானவை, நமது நலிவோ மிகக் கடுமையானது.

நமது நோய்களுக்கு மருந்தே இல்லை.

நமது துன்பங்களுக்குத் தீர்வே இல்லை.

நாம் சோர்வுற்றுள்ளோம், அதனால் ஆறுதல் இல்லை!’

இவ்வாறாகவே அவர்கள் ஓலமிட்டுக் கதறி அழுதும்,

அவர்களின் அந்த அழுகுரல் கேட்கப்படுவதில்லை.

அவர்கள் வெளியிட்டபடி, அவர்களின் துன்பத்தை நுகர்நது கொண்டிருக்கிறார்கள்; அதிலிருந்து விடுதலை கிடைப்பதில்லை;

அவர்கள் ஆறுதலுக்கு அலைந்தாலும், அது அவர் களுக்கு எட்டாது;

ஏனெனில், இருள் படர்ந்த இடத்திலும்,