பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 129

பணிவின்றி யாரால் உண்மையைக் காண முடியும்? அடக்கவொடுக்கம் இல்லாமல் எவரால் அந்த எல்லாம் ஒன்றானவரை நன்கு புரிந்து மனத்தினால் பற்றிக் கொள்ள முடியும்?

தாழ்வில்லாமல் எவரால் அந்தப் பெருமை மிக்க மெய்மையைக் காண முடியும்?

பணிவுடன் அன்பும் ஒத்து வாழ்கிறது; அறிவும் அவற்றுடன் நிலை கொள்கிறது. தாழ்மையான நெஞ்சத்துடன் அமைதி தங்கி இருக் கிறது.

உனது தற்செருக்கைப் போக்கிவிடு, உனது உயர்வை மேலும் நினைவில் கொள்ளாதே, உனது மனத்தில் உள்ள தற்பெருமைகளை விலக்கி விடு;

அப்போதுதான்் உண்மை உன்னை மேன்மையாக்கும். ஆணவத்தைவிட்டு உண்மை விலக்கிச் செல்கிறது; நான் என்னும தற்பெருமையிலிருந்து அறிவுடமை அகன்று விடுகிறது;

புனிதத் தன்மையும் ஆணவமும் ஒன்றாகவே தங்கி விருப்பதில்லை.

பணிவிலிருந்து வெளிப்படுகிறது வெளிச்சம், ஆனால், இருளானது ஆணவத்துடனும் தற்பெருமை புடனும் குடியிருக்கிறது.

ஒ, மாந்தனே! எதனால் நீ பெருமை அடைகின்றாய்? அழகிலா? அங்கே காத்திருக்கிறது கட்டழிவு. உனது உடைகளிலா?