பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வெற்றிமேல் வெற்றி பெற.

முழுமையை அவன் காணும்போது, நிறைவு அடை கிறான்;

நிறைவு அடைந்ததும், எல்லோருடனும் அன்புறவுடன் இருக்கின்றான்.

பெருமை மிக்க புகழைக் காண்பவர்கள்,

விண்ணுலகின் அமைதியான இசையைக் கேட்பவர்கள்,

அவர்களே முழுமையான அறமுறைக் கட்டளைகனை அறிந்து கொண்டவர்கள்.

மிகப் பெருமை வாய்ந்தது உமது மகிழ்ச்சி! வியப்படைய வைப்பது உமது அறிவு! ஆழமானது உமது நட்புறவு! உமது ஒருநாள் அமைதி, ஒலிமிக்க ஆயிரம் ஆண்டு களைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது.

எல்லாக் கட்சிகள், எல்லாத் திசைகள, எல்லாச் சமயங்கள்,- எல்லாமே ஒறறுமையானவை.

அன்பு, எல்லோரையும் ஆதரிக்கிறது, வீழ்ந்து போகாதவாறு எல்லோரையும் தாங்கி நிற் கிறது,

எல்லோரையும் உணவூட்டி வளர்க்கிறது. ஒற்றுமை ஏற்படுத்தும் பெருமை மிக்கவர் வந்து விட்டார்;

அவர் இங்கேயே இருக்கின்றார், நாம் அவரைக் கண்டு கொண்டோம்.

அவரைத் தேடிச் சென்றோம், அவர் நம்மைத் திருப்பி அனுப்பவில்லை.

அதனால், நாம் உலகை அடைந்து விட்டோம்; அமைதி நம்மை விட்டுவிட்டுச் செல்லாது.