பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்யர் யார்? இத்தகைய மதிப்புப் பெற்றுள்ள பெருநிதிக் கிழவருக்கு லண்டன் மாநகரின் புறத்தில் பிரமாண்ட மாண, கண் கவர் வனப்பு வாய்ந்த, யாரும் அரசர் அரண்மனைதானே என்று பிரமிக்கச்செய்யக்கூடிய, ஒரு மாளிகை இருந்தது. அது பல நூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமிக்கு நடுவே கட்டப்பட்டிருக் கது. கட்டிடத்தைச் சூழ்ந்து காலையில் சூரிய ஒளி பருகி உலவிவர நறுமணம் வீசும் பூங்காவனங்கள், ! மாலேயில் சந்திரனைக் கண்டு மகிழ்ந்து கதைகள் பேசி நேரங் கழிக்கப் பசும்புல் தளங்கள், கண் பகலிலும் உட்புறம் வெயில் தோன்ருவண்ணம் வாழைகளும் வேறு மரங்களும் செறிந்த சோலைகளும் உள. வீட்டுக்கு வெளியே பயிலும் பல விளையாட்டுக் களுக்கு ஏற்ற பந்தடி மேடைகள் முதலியவற்றில் எப்பொழுதும் இளைஞரும் பிறரும் விசோதங்கள் கண்டுகொண்டிருப்பர். மாளிகைக்குள் உலகில் காணப்பெறும் விலையுயர்ந்த அலங்காரமான பொருள்கள் யாவும் வெகு அழகாக வைக்கப்பட்டு கேத்திரானந்தம் அளித்துக்கொண் டிருக்கும். பில்லியார்டு விளையாடும் மன்றங்கள், நடனசாஜல கள், விருந்தினரை உபசரிக்கும் விசாலமான ஹால்கள் முதலியவற்றைப் புகழாதார் இல்லை. ஒரு நாள் ஒரு நண்பர் வியாபார விஷயமாக அந்தப் பிரபுவைப் பார்க்கப் போயிருந்தார். பிரபு ாண்பருக்குத் தம் மாளிகையின் விசித்திர வேலைப் 35