பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்திற்கு வழி கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பது பழைய ஆசாரம். இப்பொழுதுகூட ஆபீஸ்களில் இந்த விஷயத்தில் அநாகரிகமாகவே எச்சில் துப்பக்கூடாது' என்று கோட்டீஸ் எழுதி ஒட்டுகின்றனர். ஆல்ை, நாம் நாகரிகத்தை விரும்பு கிறவர்கள். அதைக் கவனித்து நடப்போமா ? எந்த விடத்திலும்-கார், டிராம்கார், ரயில் வண்டி இவற்றிற் குள்ளும் - இருந்த விடத்திலேயே துப்பலாம். வேறு. மனிதர் மேல் துப்பியிருந்தால் என்ன, அவர் அறி யக்கூடாது - அவ்வளவுதானே எச்சில் மூலம் நோய்க் கிருமிகள் பரவும், அவைகளில் பிரதானம் கஷயரோக சம்பந்தமானவை. கஷயரோகம் அபரி மிதம் என்று சர்க்கார் வைத்தியர்கள் எழுதிக் கொண்டே இருக்கட்டுமே : நமக்கென்ன கவலை ! எச்சில் உமிழக் கூடாது என்கிருர்களே. நாம் அது மட்டுமா செய்கிருேம் புஸ்தகம் படிக்கும் பொழுது, பண கோட்டுகள் எண்ணும்பொழுது விரலை நாக்கில் தொட்டுக் காகிதங்களைத் தள்ள வில்லையா? தபால் கவர்களையும் தபால் தலைகளை யும் நாக்கில் தோய்த்து ஒட்டவில்லையா? என்ன கேடு விளைந்துவிட்டது? பிறர்க்குத் தீமை உண் டானல் நமக்கென்ன ? நல்ல காற்று அவசியம், அதுவே பிராண ஆதாரம் என்று கூறக் கேட்டிருக்கிருேம். கிழவர் கள் பிராணயாமம் செய்யப் பார்த்து மிருக்கிருேம். 91