பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



சபதம்


நமது வீரம் நாட்டு தற்கு
நல்ல நேரம் வந்தது!
தமது ளங்கு விர்ந்து தலைவர்
தயவு கூர்ந்து தந்தது!

நீதி நேர்மை நெறிகள் நாட்டில்
நிலைதவிர்ந்தி பாதுமே
பாதுகாப்பளிக்கு மாறு
பகருஞ் செய்தி போதுமே !

கலகஞ் செய்து நமையெதிர்க்கும்
கசடர் கண்க ளின்குறி
இலகும் நமதுழைப்பி னோடி
யைந்த செல்வ மென்றறி !

மானம் மனிதர்க் கணிக லனெனும்
மாண்பி னைம றப்பமே ?
ஈன ரான இவர்களுக்கி
ளைத்தி தைத்து றப்பமோ ?

நீர்க்கு ளத்திறங்கியார
நீரருந்த அள்ளலும்
போர்க்க ளத்தெ திர்த்த பொய்யர்
பொன்ற வென்றி கொள்ளலும்

இவ்வி ரண்டு மொன்றெ மக்கென்
றியம்பு கின்ற போதனை
தெவ்வர் தம்மைக் கண்டதாலே
தெளியும் அரிய சாதனை !

ஒன்று வெற்றி யன்றி மரணம்
இரண்டி லொன்று கானுவோம் !
என்ற சபத மின்றெல்லாரும்
ஏக மாகப் பூணுவோம் !

110