பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


நெல்லும் புல்லும்

" நெல் :

உழுதது முனக்கா யன்றே !
உரமிட்ட துனக்கா யன்றே !
பழுதற வரப்பு கோலிப்
பரம்படித் தருவி நீரை
முழுவதும் பாய்ச்சி யிங்கே
முதல்நட்ட துன்னை யன்றே !
அழுதிடச் சேற்றி லுன்னை
அழுத்தினர் புல்லேயன்று !

'பிறர்பொருள் திருடே' லென்று
பேசிடும் கவிச்சொல் கேளாய்
அறிஞர்பே ரன்புக் கென்றும்
அருகதை யாகா யஞ்சி,
வறிஞனென்றிரந்து தின்று
வாழ்வதை விட்டு வைதுன்
திறமையைக் காட்டின், தீயோய் !
தீர்த்துனைக் கட்டச் செய்வேன்.
தன்னறி வில்லையேனும்
தமரறி வதுவு மற்றேய் !
சென்னெலென் றென்னை நாடே
சிறப்பித்துப் புகழுங் கால், நீ
என்னெச்சில் தின்று நீண்டின்
றென்னையே யெதிர்க்கின் ருயா?
முன்னையும் பின்னை யெண்ணு
முழுமுட்டாள் புல்லே! யென்ன,

"புல் "

வாயுள்ள தென்று வாளா
வம்பிடும் வலியோர் தம்மை
ஆயிரம் நூறு பேராய்
அவனியில் அறிவேன் நானும் !

130