பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

மனிதனோ, மாடோ, மற்ற
மரஞ்செடி, நெல்லே, புல்லோ, -
தனித்தனித் தன்மை யேனும்,
தற்சமம் சுகதுக் கங்கள் ;
எனினெதற் குலகி லின்னும்
இருப்பதிவ் வேற்றத் தாழ்வு !
இனியிதை யறிந்து நீயும்
இணைந்துவா ழெம்மோ டென்ன,

செடி பூடு

"புல்சொன்ன சொற்கள் பூரா
பொருந்திற்று புலமைக்" கென்று,
பல்சின்னச் செடி பூடொன்றிப்
பாராட்டப் பண்பில் லாத
நெல் சின்னப் புத்தி விட்டு
நெட்டுயிர்ப் பெறிந்து நின்று
தொல்சின்னப் பகைபா ராட்டல்
துன்பமென் றிதுசொ லிற்று :

நெல்

"தக்கதே சொன்னாய் ! இந்தத்
தரணியிலினி மேல் நானும்,
எக்குல மெந்தச் சாதி
எதுஎவ்வாறிருந்த போதும்
ஒக்கநம் முடன்பிறந்த
தென நினைத் திதய மொன்றித்
துக்கமும் சுகமும் பங்கித்
துணையாக ഖുഖ "னென்றே,

132