பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெளியங்காட்டான்



வண்ணாத்திப் பூச்சி

வண்ணாத் திப்பூச்சி ! - இனிய
வண்ணாத் திப்பூச்சி !
எண்ணா மல் நீயும் - இங்கே
இன்று வந்த தேன்?

உனக்குத் தக்கதோர் - இடமிங்
கொதுக்க வில்லை ; நீ
இனிக்க, மலர்களில் - மதுவை
இசைத்து றிஞ்சு போய் !

அதுவு மன்றெனில் - காலை
அவிரும் பனியில் நீ
இதய மிருத்தியே - குளித்
தின்ப மெய்து போய் !

கோவில் காணிது; - சொர்க்கம்
கோரி மாந்தர்கள்
தேவன் பால் குறை - இரக்கத்
தேர்ந்த இட மிது !

வருத்தும் நோயிலா - துடல்
வலிவு வாய்ந்தவர்
மருத்து வன்மனை - வாசல்
மறந்தும் மிதித்திடார் !

ஆயி னாண்டவன் - அருளை
அடைய நீ யொரு
தீய செயலையும் - தெரிந்து
செய்ய வில்லையே !

நாளை பின்னையும் - இங்கு
நாடி நீ வரேல்
வேளை வினினிச் - செல்க
விரைந்து வெளியிலே !

147