பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


தேன் ஈ

அருமைத் தேனியே - ஆற்றல்
அமைந்த தேனியே !
பெருமைக் குரியவையே - நீயும்
பேணிச் செய்வாயே

வேறு வேறு நிறம் - உருவம்
விரும்பும் மணமுடைய
நூறு நூறு மலர் - உனக்காய்
நோன்பு நோற்கிறது

சிகரந் தனில் தேடித் தேனைச்
சேகரித்திடு வாய் !
மகரந் தங்களையே - மனையில்
மகிழ்ந்த ருந்திடுவாய் !

விருந்தும் மதுவாகும் - வீட்டில்
விரும்பும் வித முணவில் !
மருந்தும் மதுவாகும் - மக்கள்
மாளும் பிணிகளிலே !

தாழ்வி லாவுழைப்பால் - தளராத்
தகுதி யுடைமையினால்,
வாழ்வி லுயர்ந்தாய் நீ - உலகில்
வடிவில் சிறுத்திருந்தும் !

இரவு முழுவதுமே - பிரிந்திங்
கிருக்கும் தாமரையுன்
வரவை யெதிர்பார்க்கும் - விருந்து
வைக்க வைகறையில்!

காலை தனிலரும்பிப் - போதாய்க்
கமழும் மல்லிகையும்
மாலை மலர்ந்தவுடன் - உன்னை
மருவி மகிழ்ந்திடுமே !

148