பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


குஞ்சும் குழந்தையும்


காட்டி லிருந்த மரத்திலே - சூழ்ந்த
காரிருள் நீங்கும் பொழுதிலே
கூட்டி லிருந்த குருவியின் - சிறு
குஞ்சு குறித்திது கூறிற்று :

"அம்மா அம்மா அந்த வானமும் - எனக்
காவலை யூட்டி யழைக்குது
சும்மா விடுதடுக் காதெனை ; சென்று
சுற்றிப் பறந்து வருகிறேன் !"

"குஞ்சேகுஞ் சே! யின்னும் கொஞ்சநாள் - இந்தக்
கூட்டில் பொறுத்திரு கூடவே
பிஞ்சுடல் கொஞ்சம் வளரட்டும் - இறகும்
பெரிதும் தழைந்து வலுக்கட்டும்;”

அன்னை யுரைத்தது போலவே - அந்த
அருமைச் சிறுகுஞ் சிருந்தது ;
சின்ன இறகு வலுத்ததும்- சென்று
சிந்தை களிக்கப் பறந்தது !

நாட்டி லொருநகரத்திலே - ஞாயிறு
நல்லொளி செய்யும் பொழுதிலே
வீட்டிலுறங்கி விழித்ததும் - குழந்தை
விரும்பி யிதனை விளம்பிற்று :

விட்டு விடுஎன்னை அன்னையே - அதோ
விண்ணில் விரும்பிப் பறக்கிற
பட்டுப் பசுங்கிளிக் குஞ்சென-நானும்
பாரில் திரிந்து வருகிறேன் !

அன்னை யுரைத்தனள் "கண்மணி உன்றன்
அழகிய கால்கை வளரட்டும்
இன்னும் இரு சில நாட்கள் பின்-செவ்வாய்
இவ்விதம் நீயும் திரியவே !"

149