பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

காக்கைக் கும்பல்

ஒரு தினம், கதிரோன் வானில்
உதித்தொளி பரப்ப லானான்
இரண்டொரு மரங்கள் சாலை
இருபுறங்களிலும், மைனாக்
குருவிக ளவற்றில் கூடிக்
கும்மாளம் போடக் கேட்டுப்
பரிவுடன் துயிலை நீத்துப்
பாலகன் வெளியே வந்தான்.

சிந்தனை செய்த வாறே
தெருப்புறம் சென்று நின்றான்;
விந்தையாய்ச் சிறுவர் சேர்ந்து
விளையாட லானா ரங்கே !
முந்திய இரவு பெய்த
முதல்மழையிர மண்ணும்
அந்தமில் லுவகை தேக்கி
யவர்களுக்களிக்கும் போலும் !

மதிற்புற மதுவும் நல்ல
மைதானம் ; மரத்தின் கீழே,
புதியதாய்ப் பொன்னால் யாரோ
புலன்மயக் கிடவே வைத்த
அதிசயச் சிலையி தென்ன
அசையாது நின்றா னங்கே
எதனையோ கூர்ந்து பார்த்தான் ;
எதிர்பாரா தெதிர்ப்பட்டாற் போலும் !

பாதையின் மறுபு றத்தில்
பறம்புப்பாய் வைத்துப் பாங்காய்
யாதொன்று முட்பு காதே
அடைத்திருந்தார்கள் ; பாயின்

151