உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்

கவிக் குயில்

காலைக் கதிரவன் வானி லுதித்திடும்
காட்சியைக் கண்டதுமே-குயில்
ஆல மரக்கிளை மீதி லமர்ந்திசை
அள்ளித் தெளித்திடுதாம் !

கொத்தித் திரிகிற கோழியின் குஞ்சுகள்
கூடிப் பிழைத்திடவே-குயில்
சித்தங் கனிந்துநற் புத்தி மதிகளைச்
சிந்திக்கச் செப்பிடுதாம் !

கூகையின் குஞ்சுகள் சோகம் மறந்துதம்
கூட்டி லுறங்கிடவே-குயில்
தாகந் தணிகிற பாகுக் குரலினில்
தாலேலோ பாடிடுதாம் !

கூடிப் பறந்திடும் சோடிப் புறாக்களைக்
கூவி யழைத்திடுதாம்-குயில்
காடு ககைளில் வேடன் விரித்திடும்
கண்ணியைக் காட்டிடுதாம் !

பருந்துக் கரசன் விருந்துக் கழைத்தொரு
பாட்டினைப் பாடெனவே - குயில்
பொருந்திடும் பண்ணில் திருந்திட வேயுயர்ப்
போதம் புகட்டிடுதாம் !

நாவி லிருந்திசை பாவில் படிந்து
நலன்தரும் வேளையிலே-குயில்
'கா' வெனக் கத்தியோர் காக்கை வருவதைக்
கண்டு பறந்திடுதாம் !

அயல்நலம் பேணப் பயின்றபே ரன்பும்
அறிவும் அமைந்திருக்கும் - கவிக்
குயில்நலம் பேணப் பயின்றவர் யாரும்
குவலயத் தில்லை கொலோ !

156