உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புவியரசு


தந்தையின் கவிக்கு,
தோல்வியின் விளிம்பில்,
முடிவுரை எழுத
முனைந்த போது
முதியவள் நீயே
முகவுரை எழுதுக!
என-
புவியின் அரசு
புகலிடம் கொடுக்க,
நன்றி நவிலவும்
நா ... எழவில்லை
கண்ணிர்த் துளிகள்
காணிக்கை யாக்கி
வானில் தந்தை
வாழ்த்துக்கள் கூற
வணக்கம் கூறி
மனம் நெகிழ்கின்றேன்.....