பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

தெளிவு

உள்ளந்தெளிந்திடவேண்டு முல்கினில்
உள்ள மனிதலெல் லாருக்கும் !
வெள்ளி முளைத்திருள்கள்ளம் வீழ்த்தி
விளக்கும் வைகறை வேளையாய்!

'அகத்தி லுறையறி யமை யகன்றறி
வமைய வாய்ந்திடும் தெளிவுநம்
முகத்திலுறைகிற விழிகள் போல்மிக
முக்கியம் மென மொழிகுவா் !

ஒன்றுக் கொன்று முரண்ப டும்வித
முள்ள நூல்க ளனைத்தையும்.
நன்று கற்றுள மொன்றி யாய்ந்திறன்
நனியும் தெளிவினை யெய்துவோம்

தெளிவி லாப்பெரு மனித ராலிறு
தேசம் படுகிற தொல்லைகள்
அளிவிட் டுரைத்திட வல்ல வொருவரிவ்
வவனி மீதினில் இல்லைகான் !

தேசம், மதங்குலம், தெய்வம் பயின்றிடத்
தேரும் கலை, பொரு ளாட்சியம்
நேசம் பகையுற வெதிலும் நேர்ந்துநம்
நெஞ்சு தெளிவுறல் மாசியாம்!

அறிவி லாதவ:னசட னற்பனும்
அன்றி யறிவினைப் பேணு வோர்
இருளை நீக்கிடும் தெளிவெ னும்விளக்
கேற்றி னின்புறக் காணுவார்
 
சீவ னுறுந்துணை யென்ன வாழ்வினில்
சிந்தை தெளிந்திடி னன்றி. வீண்
பாவ னைகள் நடிப் பால்பெறும் சிறு
பயனு மில்லை படித்ததுமே !

167