பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


இன்பப் பொங்கல்

சேவலும் கூவியே செப்பிட வண்டினம்
சிந்தை தெளிந்தனவாய் - எழில்
வாவியில், காவினில் வீசும் நறுமலர்
வாசம் வரும்வழியே - இளம்
பாவையர் மேவிடின் கேவல மென்னப்
பரபரப் பாய்ப்பறந்து - கனி
ஆவலாய்ப் போவது காணவே நெஞ்சினில்
ஆனந்தம் பொங்குதடி !

செக்கச் சிவந்த கதிரவ னாலிருள்
செத்து மடிந்ததன்பின் - சினம்
மிக்குச் சிணுங்கும்தம் குஞ்சுக் கறிவுரை
மெத்த மொழிந்தனவாய் - அந்தப்
பக்கம் பசுமைப் படுகையை நோக்கிப்
பறந்து வரும் அரிய - நாரை
கொக்குக் குழாங்களைக் காணவே நெஞ்சில்
குதுகலம் பொங்குதடி !

காலையும் மாலையும் காது குளிர்ந்திடக்
காலில் குடியிருந்து - குயில்
பாலுடன் தேனைக் கலந்திடும் பான்மையில்
பண்க ளிசைக்கையிலே - அந்த
நீல முகிற்குலம் நின்றிளைப் பாறவே
நீண்டு வளர்ந்திருக்கும் - பசுஞ்
சோலையி லேமயி லாடலைக் காணவே
சுந்தரம் பொங்குதடி !

ஊனு முயிரு முருக வுளத்தில்
உவகை சுரந்திடவே - அந்தக்
காணகந் தன்னில் கலையும் பிணையும்
கதிரவன் பொன் னொளியில் - மூழ்கி