பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்


உளத்தியல்பு

<poem>செல்வமிச் செல்வனெனச் சிந்தைகளித் துளள்தாய் கல்வியும் கற்றுக் கருத்துற்று - நல்வினைகள் காலம் கணித்துக் கவின்கலை போல் செய்துவக்கும் சீலனிவ னென்பார் சிலர்.

எதிராய்நின் றென்னை யிகழின்நா னேற்பேன் புதிராய்நின் றென்னைப் புகழின் - கதிராய் நின் றுள்ளஞ் சுடுவ துணர்த்தாம லூமையென விள்ளாது கொள்வேன் விடை

கன்னித் தமிழ்க்கடலில் கண்டெடுத்த நல்முத்து மின்னின் கதிரோன் மெலிவான்மற் - றுன்னி விலையின்றிச் சுடுகவென் றீயின்நான் வேண்டார் கலையின்றி மூடுவார், கண்.

அறிவதறிந் தாயா ரகத்துய்மை தோயார் உறுவதறிந் தாயா வுலுத்தர் - முறுவலது வஞ்சனையில் தோய்ந்ததெனும் வல்லோர்வாய்ச் சொல்லுளதென் நெஞ்சினில் தோய்ந்து நிலைத்து.

குணம் பற்றிக் கொள்ளக் குறள் கற்றுக் கொண்டதனால் மணம்பற்றி மக்கள் மகிழப்-பணம் பற்றிப் பற்றதில் வைக்காமல் பண்புகளில் வைத்ததனை மற்றவர்க் கீவேன், மகிழ்ந்து.

இருட்டி லெழில்விளக்கேற்றுதலே யென்ன மிரட்டும் திருட்டும் மிரழத் - தெருட்டும் அறிவினைப் பூண வணுகுவோர்க் கீந்தாங்

குறவினைப் பேண லுவப்பு.<poem>

188