பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


காசுவீண் செய்வதும் காலம்வீண் செய்வதாய்
மோசமென முன்னேர் மொழிந்ததை - வாசகமாய்
நெஞ்சிற் பதித்து நிலைத்தேன் இனியெவர்க்கும்
தஞ்சமெனத் தாழ்த்தேன் தலை.

உளத்தூய்மை யில்லாதா னுராட்சி யால்தன்
வளத்தை வளர்த்திடநல் வாய்ப்பாகும்-குளத்தில் குளிக்கப்போய்ச்சேறப்பிக் கொண்டுரார் வானத்
துளிக்குக்காத் தார்போல் துயர் !

தன்னை யறிந்து தனையுயர்த்தித் தன்னறிவால்
தனையாட் கொள்வதுதன் நம்பிக்கை - என்னை
புலரும் பொழுதில் புலன்கவரப் பூத்த
மலரின் மணமதன் மாண்பு!

மலர்விரிந்து தூய மணம்பரவு மாறாய்ப்
பலர்பரிந்து வாய்மை பரப்பின் - புலரியில்
கழ்ந்தவிருள் தீரச் சுடர்தோன்றி யாங்குநாம்
தாழ்ந்தமருள் பேரும் தலத்து !

தொக்கி யிருக்கும் சுதந்திரச் சொற்பொருளை
அக்கறையா யாய்ந்தறியோமாயின்நாம் - எக்காலும்
துக்கம் தொடர்பாகித் தொல்லைகட் காட்படுவோம் முக்காலிஃதுண்மை மொழி!

அறிவ தறியாதான் ஆண்டவனை வேண்டிப் பெறுவதொன்றில்லைநாம் பெற்ற - சிறுமி
மணலை யுணவாய் மனத்தில்பா வித்தாங்
குணலொப்ப தாமென் றுணர்!

189