பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

அவர்தம் கவிதைகளை என்னைப் பார்வையிடச் சொன்னார். அவற்றில் இருந்த ஒரிரு எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு என்னை வெகுவாகப் பாராட்டினார். அன்று பிரியா விடை பெற்றோம். அதற்குப் பின் பலமுறை அவருடைய சந்திப்பு எங்கள் அறிவை விளக்கம் செய்தன; தமிழ்ப்பற்றிற்கு மெருகேற்றின. ஒரு சமயம் கவியரங்கம் ஒன்று ஏற்பாடு செய்து அதில் தலைமை ஏற்க வற்புறுத்தி அச்சேற்றிய அறிக்கையை அனுப்பி வைத்தோம். அவரும் வந்தார். ஆனால் மேடைக்கு வரவில்லை! எங்கள் இல்லத்திலேயே தங்கி விட்டார். என் தந்தையாருடன் நீண்ட நேரம் பஞ்சாலை பற்றியும், தியாகி என்.ஜி.ஆர் பற்றியும் அரசியல் நிலவரம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு கெஞ்சியும் மேடைக்கு வர மறுத்து விட்டார்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்.அவர்கள் மாச்சம்பாளையம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கவிஞன் நூல் ஒன்றை அடிகளாருக்குப் பரிசாக வழங்கினார். அடிகளாரும் தம் பேச்சினுாடே கவிஞன் நூலில் சில கருத்துக்களை மேடையில் எடுத்துரைத்துப் பாராட்டினார். தாம் முழுமையாகப் படித்துப் பார்த்து எழுதுவதாகக் குறிப்பிட்டார். சில சமயங்களில் எங்கள் இல்லங்களில் சில நாட்கள் தங்கியிருந்து பாடம் நடத்திய பசுமையான நினைவுகள் எங்கள் உற்றார் உறவினர் உட்பட எங்கள் ஊரில் உள்ளோர் பலருக்கும் நீங்கா நினைவுகளாகும். அவர் எங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உடனே புறப்பட்டு மாச்சம்பாளையம் வந்து விடுவார். பத்து நாட்கள் தங்கியிருந்து எம் வீட்டு நூலகத்தையும், அன்னை நூலகத்தையும் பயன் படுத்திக் கொள்வார்.

எங்குச் சென்றாலும் மாலை ஆறு மணியிலிருந்து 9.00 மணி வரை அவருடன் பேச நேரம் ஒதுக்கி விட வேண்டும். அவ்வாறெல்லாம் பாடல் கேட்கப் பெறும் பேறு பெற்றோம். நண்பர் அழகுதாசனின் கொக்கரக்கோ குழந்தைக் கவிதை நூலைச் செப்பம் செய்து தந்தவரும் அவரே. ஒரு சமயம் கவிஞர், அவர்களின் மூத்த மகள் வசந்தாமணி உள்ள புளியம்பட்டியில் தங்கியுள்ளார் என்று அறிந்து அவரைக் காண, நானும், நண்பர் அழகுதாசனும் ஆவலுடன் புறப்பட்டுச் செல்லும் போது வழியில்

199