உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனால் மனமோ "சும்மா எழுது. கெளரவத்தைக் கைவிடாதே" என்று கூறுகிறது. இந்தப்போராட்டத்துக்கிடையே அகப்பட்டுத் தவிக்கிறேன் நான்.

வெள்ளியங்காட்டான் பாடல்கள் நாட்டிற்கு நன்மை செய்யக்கூடிய கருத்துக்களுடையவை. அவைகளில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாயிருக்கின்றன. இவற்றைப் படித்துப் பாடிப் பயனடைவது நமது கடமை என்று உங்களிலே ஒருவனாகிய நான் எண்ணுகிறேன். படித்துப் பாருங்கள். நீங்களும் அப்படியே எண்ணுவீர்கள்.


குறிப்பு -

வெள்ளியங்காட்டான் என்னும் பெயருடையவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவருக்கும் எனக்கும் பழக்கமில்லை. அவர் பாடலுக்கும் எனக்கும் தான் பழக்கம்.

23