உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


       கொலைக்குக் கூடத் தம் கூடப் பிறந்தவர்
       கூடமாட உதவும் உலகினில்
       கலைக்குக் கைதர முற்றும் மறுத்தும் - நான்
       கலக்கமின்றி முயன்று முன்னேறியும் -

என்ற இந்தக் கவிதை வரிகள் போதுமே கொலையை யாரும் தன்னந்தனியாகச் செய்வதில்லை. துக்குக் கயிற்றில் தொங்குவதற்குக்கூடத்தங்களைத்தயார்ப்படுத்திக் கொண்டே கூட்டுச் சேர்கிறார்கள். அகப்பட்டுக் கொண்டாலும், அவர்களை மீட்க ஒரு கூட்டமே முயல்கிறது. ஆனால் ஒரு கவிஞனைக் கண்டு கொள்ள யாளிருக்கிறார்கள்?

கவிஞனாவதற்கு ஏன் யாருமே உதவுவதில்லை யென்றால், பாழாய்ப் போன உலகில் அவன் வாழ்க்கை கந்தலாகி விடுவது மட்டுமல்ல, அவனை அண்டியிருப்போர் கூடக் கந்தலாகிப் போவதால்தான். இது என் இதயத்தின் எதிரொலி. இதைக் கேட்க உங்களுக்கு விருப்பமில்லாமலிருக்கலாம். ஆனால் நான் இதற்காகவே காத்திருந்தேன். பலவீனமான என் இதயம் நினைவுகளின் சுமை தாங்காமல் வெடித்து விடுமோ என நான் அஞ்சினேன். நீங்கள் இதை நிராகரித்தாலும், அடுத்த தலைமுறை. இல்லை அதற்கும் அடுத்த தலைமுறை. அதுவும் இல்லையேல் பிகாஸோவின் ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்குப்பின் பார்க்கப்பட்டதுபோல இதுவும் கேட்கப்படக் கூடும் அல்லவா? உலகம் முழுவதுமுள்ள மக்களில் எவரேனும் ஒருவரின் இதயத்தில் இது புகுந்து வெளிப்படும். ஒரே யொரு விதை, ஒரேயொரு மரம், மீண்டும் ஆயிரமாயிரமாக.......!

" குழந்தாய் ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான ஆற்றல் இயல்பாய் அமைந்திருக்கிறது. ஆனால் அதை எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும். காலம் எதற்காக இருக்கிறது? ஆற்றல் எதற்காக இருக்கிறது? செயல்படவே அல்லவா? ஆகவே நீ செயல்படு. ஒவ்வொரு கணமும் செயல்படு. ஓடாமல் உட்காராமல் நிமிர்ந்து நட! உன்

38