பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனக்காகவும், என் அண்ணாவுக்காகவும் வேலை தேடலானார்.

மூன்றாண்டுகளே படித்த அந்த மனிதருக்கு யார் தருவார் வேலை? 'நவஇந்தியா' என்ற நாளிதழில், நீண்ட காலமாகக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அங்கே அவருக்கு ப்ரூப் ரீடர் வேலை தரப்பட்டது.

சிங்காநல்லூரிலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்படுவார். பகல் 12 மணிக்கு வருவார். உணவு என்ற பெயரில் எதாவது உண்டுவிட்டபின் மீண்டும் நடையைக் கட்டுவார். மாலை ஆறு மணிக்குத் திரும்புவார். ஆக, இருபது கிலோ மீட்டர் நடந்து பெற்ற வருமானம் மாதம் முப்பது ரூபாய். ஆயினும், அன்று கிடைத்த வேலைக்கு நன்றி கூறினாலும், தமிழகத்தைத் தவிர உலகில் வேறு எந்த மூலையிலும், ஒரு கவிஞனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒருவேளை என்தந்தை என்பதால் எனக்கு ஏற்பட்ட கழிவிரக்கமோ, என்னவோ?

ஆனாலும் இது கதையல்ல நிஜம். அந்த நிஜங்கள், மீண்டும் ஒரு முறை எழுத்தாளனின் வாழ்வில் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம்! அப்படி நிகழ்ந்தால், அதற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளச் செய்யும் எச்சரிக்கையும் கூட...

சரி, மீண்டும் நிஜத்திற்கு வருவோம்.

பற்றாக்குறை வருமானம். இரவு மூட்டைப் பூச்சிகளின் ஓயாத கடி, காலுக்குப் போதாத விரிப்பு! இரவு கந்தல் துணிகளை நனைத்து லேசாக முறுக்கி அதன் மேல் துவும் சாம்பல் என்று அதன் கடியிலிருந்து தப்பிக்க ஏக தடபுடல் தான். பிறகு மூட்டைபூச்சிக்கு ஒரு பாட்டு வேறு! வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களின் நினைவுகளால், சுய பட்சாதாபத்தில் நெகிழ்ந்து போய் அனைவரையும் சபித்ததுண்டு. உண்மையை நேசிப்பவனுக்கு இத்தகைய சோதனையா என்று. ஆனால் உண்மையை நேசிப்பவனுக்கு மட்டும் தான் இத்தகைய சோதனை என அறிந்து கொண்ட போது......

ஒரு நாள் தந்தை படும் பாட்டைச் சகிக்க முடியாமல், நான்

49