பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கள் இருவரின் திருமணம் முடிந்த கையோடு கன்னட மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். நான்காண்டுகள் வனவாசம் முடிந்து, கன்னட மொழியைக் கற்றுக் கொண்டு நலம் குறைந்த உடல் நிலையோடு வந்தவர், அண்ணாவோடு தங்கி எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

இலக்கியம் என்பது உயர்ந்த சிந்தனைகளின் உறைவிடம். அதுமட்டுமல்ல, மக்களை உருவாக்கும் ஆற்றல் மிக்க ஒரு சக்தியும். அவர்களின் வழி காட்டியும் கூட . அதைச் சரியாக உருவாக்க வில்லை என்றால், நாட்டில் என்ன முன்னேற்றம் இருந்தாலும் அது பயனற்றதே என்பது பெரியோர் வாக்கு !

அப்பா தம் புதிய கவிதைத் தொகுப்பு ஒன்றைப் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதைக்கேட்டு நான் திடுக்கிட்டேன். பல கவிதைத் தொகுப்புகள் நினைவில் வந்து நெஞ்சை நெருடின. அதன் வலி கண்களை நனைத்தது. ஜீவ மரணப் போராட்டத்தோடு பதிப்பிடப்பட்ட பலப் புத்தகங்கள் அட்டைக்குக் காசில்லாமல் பதிப்பகத்திலேயே பதுங்கி விட்டதை நினைத்த போது ஏற்பட்ட வேதனை - மிண்டும் ஒரு கவிதை தொகுப்பா? என்று கேள்வி எழுப்ப முகத்தை திருப்பிக் கண்ணிரைச் சுண்டி எறிந்தேன். தந்தையின் விழிகளோ எதிர்ப்பார்ப்போடு ஒளிர்ந்தன.

நான் இதைச் சகோதரியிடம் கூறியபோது “அதற்குப் பெயர்தான் கவிஞன் என்பது. தோல்வி மேல் தோல்வியைத் தழுவினாலும் அதனின்றும் பின் வாங்காமல் உறுதியோடு இருப்பதே அவரைநம்மிலிருந்து வேறுப்படுத்துவது ஆகும்" என்றார்.

ஒரு நாள் புத்தகம் போடும் அப்பாவின் விருப்பத்தைச் நிறைவேற்ற திரு. ஜி.கே. எஸ் அவர்கள் உதவியை நாடி அவர் வீட்டு முன் காத்திருந்தேன். மணி மேல் நிலைப்பள்ளி மேலாளர் அங்கு வந்து "என்ன?’ என வினவினார். சொன்னேன்.

" புத்தகம் போடுவதற்கா ? இங்கு ஏராளமான புத்தகங்கள் ஏற்கனவே குவிந்து கிடக்கின்றன. என்னைக் கேட்காமல்

53