பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


குப்பை

'ஏரினும் நன்றெரு விட' லென வள்ளுவர்
இயம்புவ தெண்ணிரோ? -இந்தப்
பாரினிற் குப்பையைப் பக்குவப் படுத்தியே
பயிர்களைப் பண்ணிரோ?

எப்பொழுதும்மெரு வாவதற் கிருப்பதை
ஏசி யிகழ்கின்றீர்-தினம்
குப்பையோ குப்பையென் றொருகுறை கூறியே
கூட்டியுமெறிகின்றீர் !

விடுமுன் வாசலைக் கூட்டியே குப்பையை
வீதியி லெறிந்துவிடின்-வெறும்
காடுபின் கழனியும் காலமெல் லாமது
கலந்திடக் காத்திடுமே !

'காண்பவர் கண்கவர் கலையினைக் குப்பைதான்
கற்றிட விலை' யெனினும்-அது
மாண்புறப் பயிர்களைக் காண்புற வளர்த்திநம்
மனம்மகிழ் வித்திடுமே !

நீரிருந்தும்விளை நிலமிருந் தும்மன
நிறைவிருந் துழுதிடவே - நல்ல
ஏரிருந் தும்மிடும் எருவிருக் காதெனில்
எதுவுமி ராததிலே !

ஊட்டி வளர்க்கிற பாட்டிகை யுணவென
உரம்பயிர்க் குதவிடுமே ! - உரம்
போட்டறியாதவர் வீட்டினில் பெருந்துயர்
புகுந்திட விதிவிடுமே !

நிலத்தினி லுரமிலையெனின்நிறை மாந்தர்தம்
நெஞ்சினி லுரமிலையே - உழும்
குலத்தின ரேயிதை யுளத்திற் கொள்ளாதவர்
குடித்தனம் தரமிலையே !

82