பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்

பட்டினிச்சூழ்


உலகெலா முனர, உண்மை
உணர்ந்தவ ரியம்ப வுள்ள
அலகிலாத் தொழில்கள் கண்டும்,
அருமந்தத் தமிழர் வாழ்வில்
விலகிலா வெறுமை, யின்னல்,
வேலையில் லாமை யாலே
நலிகிற மக்கட் குள்ளே
நானுமின் றொருவ னானேன்.


மழைவள மருகிற் றில்லை
மலைகளி லிருந்து மண்ணில்
கழைவளம் மாய்க்கப் பாயும்
காவிரி காயக் காணோம் !
தழைவள மிழக்க வில்லை
தாவரம், தலைமை மாந்தர்
பிழைவள முறவே நாட்டில்
பெருந்துயர் பிறங்கிற் றந்தோ !

ஆலய மருமை நாட்டில்
அறியாமை வளர்க்க, ஆளும்
நூலையும் நுணுகிக் கல்லார்
நூக்குவோ ராக, நோற்கும்
சீலமில் லாதார் செல்வம்
சேர்ப்பவராகிச் சேர,
வேலியில் லாமல் செய்த
வேளாண்மை யானோம் நாங்கள் !

அங்கமோ அறிவோ ஊனம்
அணுவள வில்லா ராயும்,
கங்கையி லிருந்தும் தண்ணிர்

92