பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

13


ஓர்மகனாய் நின்ற எந்தன் உயர்வேதன் வாழ்வாகச்
சீர்புவியில் வாழ்ந்திடுநற் செல்வமவள்—பேரான

செல்வம் எனக்கெனவே சேர்க்கத்தன் இன்பமெலாம்
ஒல்லாவே என்ன ஒதுக்கினவள் — எவ்வாறும்
நான்மகிழ்ந்தால் தான்மகிழ்வாள் நன்மனத்தில் வாழ்வுற்றுத்
தேன் இனிக்கும் தீஞ்சொல்லைச் செப்பிடுவாள்
—மாறான

ஒன்னார் தமக்கிளையா உள்ளத்த ளாய்நின்று
என்னாளும் என்னுயிர்க்கு இன்பமளி—பொன்னான

நற்கருணை கொள்வாள் நலஞ்சிறந்து என்னைவளர்த்
துற்றவனாய்ப் போற்ற உறுதிசெய்தாள் —பெற்றவளே

தானாய் இருந்தாலும் தந்தைபோல் கல்விநலம்
வேண அளித்தென்னை வித்தகனாய்—நானிலத்தே

எல்லாரும் போற்ற எழிலுடைய னாக்கினாள்
பொல்லாங்கைப் போக்கிக் குருவானாள்— நல்லாளாய்

ஐந்து பெருங்குரவர் ஆனாளே யாய்நின்ற
விஞ்சு நலமளிக்கும் மேதக்காள்.

(நூல் கவிதை உள்ளம் — வெள்ளம் விடு தூது — 1939இல் எழுதியது)

இவ்வாறு கடிதோச்சி மெல்ல எறிந்து காவலும் காத்து. கற்பன கற்க வழிவகுத்துப் போற்றித் தம்மகனை வளர்த்தாள், எனினும் அவன் தன்னைவிட்டு என்றும் நீங்காதிருக்க வேண்டும் என்ற அவாவினால் வாலாஜாபாத்தில் எட்டாம் வகுப்பு படித்த உடன் மேலே படிக்க வேண்டாம் என வற்புறுத்தினாள். ஆம்! மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் (1928) கணவனார் மறைந்தார். அந்த வருத்தத்தாலும் ஒரே மகனைப் பிரிய மனமில்லா நிலையிலும் மேலே படிக்க வேண்டாமென்றும் வீட்டிலேயே இருந்து