பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வள்ளியம்மாள் கல்வி அறம்


சொந்த நிலத்தில் பயிர் செய்து வாழலாம் என்றும் வற்புறுத்தினார். ஆனால் பிள்ளையின் ஆர்வமும் பிற பெரியோர்கள் தூண்டுதலும் சேர, மகனைச் செங்கற்பட்டில் படிக்க அனுமதித்துக் காமாட்சி அத்தையையும் உடன் அனுப்பி வைத்தார். மகனும் தான் ஒருவேளை படிக்காது ஏதாவது வகுப்பில் தவறினால் அந்த ஆண்டே படிப்பை நிறுத்தி விடுவதாகக் கூறினார். அதனால் அன்னையார் மகனிடம் கொண்ட அன்பினாலும் அவன் உடனிருக்க வேண்டுமென்றதாலும் ஆண்டுதோறும் தேர்வில் வெற்றி பெறக்கூடாது என ஆண்டவனை வேண்டுவர். ஆனால் மகன் முறையாகப் படித்துப் பத்தாம் வகுப்பிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு, எக்காரணம் கொண்டும் மேலே படிக்கக் கூடாது என்று ஆணையிட்டார். ஆம்! அறியாமையால் அல்ல - அன்பினால்.

பின் மகன் வீட்டிலிருந்தே பயிலலாம் என்ற நிலையில். தமிழ் படிக்க விருப்பம் தெரிவிக்க, வீட்டிலேயே படிக்க இசைவு தந்தார். இடையில் ஈராண்டுகள் அண்ணாமலையில் பயில அரைமனத்தோடு விருப்பம் அளித்தாலும், பிறகு அங்கேயும் செல்ல வேண்டாம் எனத் தடுத்தார். பின் மகனார் வீட்டிலேயே படித்துப் பட்டம் பெற்ற பின் மகிழ்ந்ததோடு காஞ்சி ஆந்திரசன் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியனாக வருமாறு வலிய வந்த வாய்ப்பினைத் தட்டிக் கழிக்காது ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

இடையில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மகனாருக்கு மணம் செய்து காண விரும்பினார். அப்படியே அவ்வூரில் உள்ள உறவினர் மகளை மணம் பேசி முடித்தார். எனினும் அந்த மணவாழ்வு மகனுக்குச் சிறக்கவில்லை யாதலால் மனம் வருந்தினார். பின் காஞ்சியில் பணியேற்று ஓராண்டு பணி புரிந்தபின், அன்னையும் பெரிய அன்னையும் மகனின் மண வாழ்வுச் சிறக்கப் பலவகையில் முயன்றும் முடியவில்லையாதவாலும், ஓராண்டு காஞ்சியில் ஓட்டலில் உண்டு தனியாகக்