பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா

15


காலம் கழித்தமையாலும் வேறு மணம் செய்ய முயன்றனர். உக்கல் கோபால முதலியார் மகள் சந்திராமணியினை மண முடித்து, காஞ்சியில் தனிக்குடித்தனம் அமைத்து அக்காவினை--மீனாட்சி அம்மையினை உடன் துணையாக இருத்தி, வள்ளியம்மாள் அங்கம்பாக்கத்திலேயே இருந்து, அனைத்து நிலபுலன்களையும் தோப்புத்துரவுகளையும் பார்த்துப் பரிபாலித்து வந்தனர். மகனாருக்கு 1940இல் பெண்மகவு பிறந்ததையும் கண்டு களித்தனர்.

பிறகு 1941இல் உடலில் உண்டான புண் புரையோடிய காரணத்தால் நோய்வாய்ப்பட்டு ஒரு சில மாதங்கள் படுக்கையாயிருந்து 1941 ஆம் ஆண்டு ஜனவரி 30/31 இல் இறையடியுற்றார். காஞ்சியிலேயே வேகவதி ஆற்று எல்லையிலே அவர் பூதவுடல் பூந்தணல் இடையில் மறைந்தது. அவர்கள் மறையுமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியினை அவர் தம் மகனாரும் அருகிருந்த மற்றவரும் இன்றளவும் சொல்லி அவர் தம் தெய்வ நிலையினைப் போற்றுகின்றனர். உயிர் நீங்கச் சில நிமிடங்களுக்கு முன் தன் மகனை அழைத்து 'சிவானந்தம் (இப்பெயரால் தான் அவர் மகனை அழைப்பார்) - நான் போய் வருகிறேன். தேங்காய் உடைத்துக் கற்பூரத்தைக் கொளுத்து' என்றார். அவர் மகனார் அவ்வாறு செய்ததற்கும் அவர் ஆவி பிரிந்ததற்கும் இடைவெளியே இல்லை. (கிராமங்களில் உயிர் செல்லும்போது மக்கள் தெய்வமாகும் அவருக்கு தேங்காய் உடைத்துக் கற்பூர ஆரத்தி செய்து வழிபடுவது இன்றும் வழக்கமாக உள்ளது) ஆம்! அந்த வகையில் கடைசி வரையில் நினைவு நீங்காதிருந்ததோடு தான் இறைநிலை உற்றதை உணர்ந்து நின்ற தன்மை போற்றக் கூடியதல்லவா!

அவர்கள் மறைந்த பின் அவர்தம் பதினாறாம் நாள் சடங்கு சொந்த ஊர் அங்கம்பாக்கத்தில் நடந்தது. அந்த இறுதி நாள் சடங்கினைத் திரு.வி.க. அவர்கள் வந்து நடத்தி வைத்தனர். உடன் சச்சிதானந்தம் பிள்ளை , தெ. பொ,