பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளிவிழா ஆண்டில் முதுகலை வகுப்புத் தொடக்க
விழாவில் (13-7-1992) சென்னைப் பல்கலைக்கழக
ஆட்சிக்குழு உறுப்பினர்

மாண்பமை திருமதி கவிநிலவு தர்மராஜ்
எம்.எல்.ஏ.
அவர்கள் ஆற்றிய உரை



அந்தியில் மஞ்சள் பூசி, ஆதவன் ஒளியைப் பெற்று இளந்தளிர் பசுமை கொண்டு நமது சிந்தையில் வீற்றிருக்கும் தமிழ்த் தாயினை வணங்குகின்றேன், பெண்களுக்குப் பெருமை தேடித்தரும் விதத்திலே இக்கல்லூரி விளங்குகிறது. புள்ளி மான்களெனத் திரியும் பல மாணவச் செல்வங்களைக் கொண்ட இக்கல்லூரி இப்பொழுது வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கிறது. சான்றோர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் தன்னடக்கத்துடன், இக்கல்லூரியின் பொறுப்பினை ஏற்றுத் திறமையாக நடத்திச் செல்கின்ற நிறுவனர் ஐயா அவர்களுக்கும், மற்றும் தாளாளர். ஆலோசகர், தலைவர் என்று பொறுப்பினை ஏற்றுள்ள அனைவருக்கும், கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் இங்கு வருகை தந்துள்ள பேராசிரியர் அனைவருக்கும், திரளாக வந்துள்ள மாணவர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

இக்கல்லூரியின் முன்னேற்றம் கருதி மேலும் இரண்டு புதிய துறைக்கு அனுமதி பெற்றுத் தருமாறு ஐயா அவர்கள் என்னிடம் கேட்டார். அதன்படி சென்னைப் பல்கலைக்கழகக் கூட்டத்தின் போது இரண்டு துறைக்கு உரிய அனுமதியைப்