பக்கம்:வெள்ளை யானை.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏதேன் தோட்டத்துப் பாம்பு!

கேட்பவர் உள்ளத்தைப்
பட்டுக் கயிற்று முடிச்சால்
சுருக்கிட்டுத் தொங்கவிடும்
பிளவுபட்ட உன்
தத்துவ நாக்கை
ஆண்டவனாலும்
அறுக்க முடியவில்லை.

நீ -
ஏவாளின் காதுகளில்
இன்னிசை வீணையை
மிழற்றும் போது,
சாபக் கனிகளுக்குக்
கட்டியம் கூறும்
உன் நச்சுப் பற்களைச்
சாமர்த்தியமாக
மறைத்துக் கொள்கிறாய்.

நீ -
பார்வையாலேயே
நஞ்சைக் கொட்டும்
திட்டி விடம்.
உன் -