பக்கம்:வெள்ளை யானை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67 வெள்ளை யானைஅந்தப்புரக் காரியதரிசிகள்.

இன்று -
ஆளும் வர்க்கத்தின்
அந்தரங்கச் செயலாளர்களாகவும் அமைச்சர்களாகவும்
ஏன்-
தளபதிகளாகவும் கூட
இடம்பெற்று விட்டனர்.

இவர்கள் -
போர் செய்வதாகச் சொல்லி
வாளைச் சுழற்றி
அடிக்கடி
தங்களையே
காயப்படுத்திக் கொள்கின்றனர்.

இவர்கள்
அலுக்கிக் குலுக்கிச்
சிரிக்கும் போது
அருவருப்பு
அட்டையாக
நம்மீது ஊர்கிறது.

இவர்கள்
அரசவையில்
ஆடட்டும்! பாடட்டும்!
ஆனால்-
பிள்ளை பெற்றுக் கொடுப்பதாக
அடிக்கடி சொல்கிறார்களே!
அதுவும்-