பக்கம்:வெள்ளை யானை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணகியின் சிலம்பும்
காகுத்தன் பாதுகையும் சந்தித்தால்....


பாதுகை:

சிலம்பே !
பாதங்களின்
சிருங்கார ரசமே!
எடுத்த அடிதோறும்
இசைக்கும் வீணையே!
செம்பஞ்சு பூசிய
சிற்றடிகளின்
சிரிப்பே!
சிலிர்ப்பே!
கண்ணகியின் கால்நடையில்
நீ ஒரு சிம்ஃபனியே நடத்திக் காட்டினாய்.
பகலில் உரக்கச் சிரித்த நீ
படுக்கையறையில் மட்டும்
ஏன் மெதுவாகச் சிரித்தாய்?
கோவலனிடம் அச்சமா?

சிலம்பு:

நீயென்
வசந்தகாலக்
கனவுகள் பற்றிப்