பக்கம்:வெள்ளை யானை.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காந்தியம் காந்தி. காந்தியென்று எங்கோ கேட்ட பெயர் எங்கட்குப் புரிய வில்லை. அரசியல் வாதிகளின் அவசர கோஷத்தில்' காதின் ஒரத்தில் பாதியாய் விழுகிறதே. அதுவா உனது பெயர்? எங்கோ கேட்ட பெயர் எங்கட்குப் புரியவில்லை. கோடிக் கணக்கில் வாண வேடிக்கைசெயும் ஆர்ப்பாட்டக் காரர்களின் அலங்கார மேடைகளில் அணைந்தணைந்து எரிகிறதே அதுவா உனது பெயர்? எங்கோ கேட்ட பெயர் எங்கட்குப் புரியவில்லை. விடியாத விடியலில் அரைகுறைத் துரக்கத்தில் புரியாத கனவுபோல் தெரியாமல் தெரிகிறதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/76&oldid=916353" இருந்து மீள்விக்கப்பட்டது